புதன்கிழமை, மே 05, 2021
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் வங்கிகள் திறப்பு!- பணம் எடுக்க குவிந்த மக்கள்

ஆப்கானிஸ்தானில் 10 நாட்களாக மூடப்பட்டிருந்த வங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பணம் எடுக்க வங்கிகளில் மக்கள் குவிந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையடுத்து அந்நாட்டை கடந்த 15-ம் தேதி தலிபான்கள் கைப்பற்றியுள்ளன. ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய அந்நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன. இதனால், பொதுமக்கள் தங்கள் கைகளில் பணம் இல்லாமல் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வங்கிகள் திறக்கப்பட்டதால் தங்கள் கணக்குகளில் சேமிப்பில் உள்ள பணத்தை எடுக்கும் நோக்கத்தோடு நூற்றுக்கணக்கானோர் வங்கி முன் குவிந்தனர்.

தலைநகர் காபூலில் வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் தங்கள் சேமிப்பு பணத்தை எடுக்க மக்கள் குவிந்தனர். இதனால், வங்கி முன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும், வங்கிகளில் போதிய கையிருப்பு பணம் இல்லாததால் பணம் எடுக்க வந்தவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் மத்திய வங்கி அமெரிக்காவின் மத்திய வங்கியில் சேமித்து வைத்துள்ள 7 பில்லியன் டாலர்கள் தங்கம், பணத்தை அமெரிக்க அரசு முடக்கி வைத்துள்ளது. அதேபோல், ஆப்கானிஸ்தான் அரசுக்கு இந்த வாரம் ஒதுக்கப்படவேண்டிய 460 மில்லியன் டாலர்கள் பணத்தை சர்வதேச நிதியம் நிறுத்தி வைத்துள்ளது . இதனால், ஆப்கானிஸ்தானில் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: January 01, 1970
ஆப்கானிஸ்தான், வங்கிகள், தலிபான்கள், பொதுமக்கள், Afghanistan, Kabul banks, Taliban, people
`51 செ.மீட்டர்தான் உயரம்!'- உலகிலேயே குள்ளமான பசு இதுதான்

51 செ.மீட்டர் உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்த்து செல்கின்றனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே 30 கிலோமீட்டர் தொலைவில் சாரிகிராமில் உள்ள ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணையில் ஒரு பசு உள்ளது. அதனை பார்க்க சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் திரண்டு வருகின்றனர். ராணி என பெயரிடப்பட்டு உள்ள அந்த பசு 51 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 26 கிலோகிராம் மட்டுமே எடையுள்ளது. இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என கூறப்படுகிறது. கின்னஸ் உலக சாதனைகளில் மிகச்சிறிய பசுவைவிட இது 10 சென்டிமீட்டர் குறைவு என்று அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என, கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014ல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீட்டர்தான்.

ராணி பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவை காண ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாராத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

பதிவு: January 01, 1970
வங்கம்தேசம், பசு, டாக்கா, Bangladesh, Cow, Dhaka
90 நிமிடங்களில் கொரோனா வைரஸை கண்டுபிடிக்கும் மாஸ்க்!

90 நிமிடங்களில் கொரோனா வைரஸை கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய முககவசத்தை எம்ஐடி, ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முககவசம் அணிகிறோம். மூலிகை முக கவசம் துணியால் ஆன முககவசங்கள், பிளாஸ்டிக் முககவசம் என பல வகை முககவசங்கள் தற்போது விற்பனையாகின்றன. ஏன் தங்கத்தில் கூட ஒருவர் முக கவசம் அணிந்து வலம் வருகிறார். முககவசங்கள் உடன் வைபை, புளூடூத், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை இணைக்கும்படியான தொழில்நுட்ப ரீதியான முககவசங்கள் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விற்பனையாகி வருகின்றன.

தற்போது விஞ்ஞானிகள் ஓர் வித்தியாசமான தொழில்நுட்பம் நிறைந்த அதிநவீன முககவசம் ஒன்றை தயாரித்துள்ளனர். முககவசம் அணிந்தவரி 90 நிமிடங்களுக்குள் கொரோனா வைரஸை கண்டறியக்கூடிய ஒரு புதிய முககவசத்தை மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

இது குறித்து நேச்சர் பயோடெக்னாலஜி பிரபல அறிவியல் இதழ் கட்டுரையில், "பிரெஞ்சு விஞ்ஞானிகள் அதிநவீன நோய்களை கண்டறியும் சென்சார்கள் பொருத்திய கவசங்களை கண்டுபிடித்துள்ளனர். காற்றில் கொரோனா வைரஸ் உட்பட வேறு ஏதாவது வைரஸ் இருந்தால் அதனை இந்த முககவசத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் கண்டறிந்து உடனடியாக முககவசத்தை அணிந்து இருக்கும் எஜமானருக்கு தகவல் அளிக்குமாம். இதனால் அவர்கள் அந்த இடத்தை விட்டு விரைவில் நகர்ந்து தப்பித்துக்கொள்ளலாம்" என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவு: January 01, 1970
கொரோனா வைரஸ், முகக்கவசம், அமெரிக்கா, ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், Corona virus, mask, Harvard University scientists, USA
அரியானாவில் மேலும் ஒரு கொள்ளையன் சிக்கினான்!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக வீரேந்தர் என்பவரை அரியானாவில் தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இந்த கொள்ளை வழக்கில் முக்கிய கொள்ளையனான அமீர் (37) என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர், சென்னை அழைத்து வரப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான அமீரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஸ்டாலின், வருகிற 30ம் தேதி வரை 5 நாட்கள் அமீரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து அமீரிடம் 5 நாட்கள் காவல்துறையினர் விசாரிக்க உள்ளனர்.

இந்தநிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக அரியானாவின் மேவாட் பகுதியை சேர்ந்த வீரேந்தர் என்பரை டெல்லியில் தனிப்படையினர் கைது செய்தனர். ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: January 01, 1970
எஸ்பிஐ வங்கி, கொள்ளை, அரியானா கொள்ளையன், தமிழக போலீஸ், SBI Bank, Robbery, Haryana Robber, Tamil Nadu Police, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
சீட்டு கட்டுப்போல் சரிந்த 12 மாடி கட்டடம்!-அதிர்ச்சியில் அமெரிக்கா

அமெரிக்காவில் சீட்டு கட்டுப்போல் சரிந்த 12 மாடி கட்டிடம் 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் உள்ளது. லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் அதிகம் தங்கி இருந்தனர். 1981 களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கட்டடம் இன்று அதிகாலை 1 மணி அளவில் சீட்டுக்கட்டு போல் சரிந்துவிழுந்தது. கட்டடத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்தது. குடியிருப்பின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுமார் 55 குடியிருப்புகள் இடிந்து சரிந்துள்ளது. இந்த கோர விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டார் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுவன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பலர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவம் நடந்தபோது கட்டடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காணாமல் போனவர்களை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டடம் இடிந்து விழுவதற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர், சேதம் குறித்த சரியான தகவல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

1981ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டடம் 1990 களில் இருந்து ஆபத்தான கட்டடமாக உள்ளது என 2020ம் ஆண்டில் பூமி மற்றும் சுற்றுச்சூழல் துறையின் பேராசிரியரான ஷிமோன் வோடோவின்ஸ்கி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராகுவே ஜனாதிபதியின் உறவினர்கள் உள்பட பராகுவேவை சேர்ந்த 51 பேரை காணவில்லை. சோபியா லோபஸ் மோரேரா, அவரது கணவர் லூயிஸ் பெட்டன்கில் மற்றும் அவர்களது மூன்று இளம் குழந்தைகள் இன்னும் காணவில்லை என்று பராகுவே வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

அர்ஜென்டினாவின் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஆண்ட்ரஸ் கால்ப்ராஸ்கோனி, அவரது மனைவி மற்றும் புதிதாக தத்தெடுக்கப்பட்ட ஆறு வயது மகள் ஆகியோரையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.

பதிவு: January 01, 1970
அமெரிக்கா, அடுக்குமாடி கட்டடம், பிளோரிடா, USA, Apartment Building, Florida, tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!- பறிபோன 30 உயிர்கள்

பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது விரைவு ரயிலும், மில்லத் விரைவு ரயிலும் இன்று நேருக்கு நேர் மோதின. இந்த சம்பவத்தில் 30 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்டத்தின் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தடம் புரண்டதற்கும் அடுத்தடுத்த மோதலுக்கும் என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவின,ர் மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு: January 01, 1970
பாகிஸ்தான், ரயில் விபத்து, பயணிகள், Pakistan, train accident, passengers, tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
You May Like