புதன்கிழமை, மே 05, 2021
செங்கல்பட்டு
40 பேர் சாட்சியங்களாக சேர்ப்பு!- சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல்!

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 40 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர். சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபா ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பதிவு: January 01, 1970
சிவசங்கர் பாபா, மாணவிகள் பாலியல் புகார், சிபிசிஐடி, Sivashankar Baba, Students Sex Complaint, CBCID
நடிகை யாஷிகா மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?

கார் விபத்து விவகாரத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது.


'ஜாம்பி', 'துருவங்கள் பதினாறு' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா. இவர் வந்த கார் கடந்த 24ம் தேதி விபத்துக்குள்ளானதில் அவரது தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கான பதில் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

அதில், கடந்த 24ம் தேதி மாலை யாஷிகா தனது டாடா ஹேரியர் காரை ஓட்டி வந்ததாகவும், அவருக்கு இடது பக்க இருக்கையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அவரது தோழி பவானி என்பவரும், பின் இருக்கையில் சென்னையைச் சேர்ந்த சையத் மற்றும் அமீர் ஆகியோரும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு பேரும் மாமல்லபுரத்தில் இருந்து, இரவு 11 மணிக்கு ஈசிஆர் சாலையில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது சூளேரிக்காடு பேருந்து நிறுத்தத்தை தாண்டியதும், கார் நிலை தடுமாறி சாலையின் இடப்பக்கத்தில் தடுப்பு மீது மோதி தலைகீழாக கவிழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டு அங்கு இருந்த பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

பதிவு: January 01, 1970
நடிகை யாஷிகா, கார் விபத்து, ஈசிஆர் சாலை, போலீஸ், Actress Yashika, car accident, ECR road, police
வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்!- திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு

திருக்கழுக்குன்றம் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது வானத்தில் இருந்து அதிக சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று அந்தப்பகுதியில் விழுந்துள்ளது. அந்த பொருளானது சுமார் 10 கிலோ எடையுடனும் காணப்பட்டது. மேலும் விழுந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் அது வெடிபொருளாக இருக்கலாம் என கருதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மர்ம பொருளை பார்வையிட்ட விஏஓ, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மர்ம பொருளை ஆய்வுக்கு உட்படுத்த காவல்நிலையம் எடுத்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: January 01, 1970
திருக்கழுக்குன்றம், மர்ம பொருள், Tirukalukundram
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடக்கம்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே அரசு பஸ் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று நோய்ப்பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


மேலும், இந்த ஊரடங்கு 21-ந் தேதி (இன்று) காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், கடந்த 19-ந் தேதி மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், நோய்த்தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த ஊரடங்கை 28-ந் தேதி காலை 6 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டது.

மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள், வகை 1-ல் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

மேலும், வகை 2-ல் உள்ள அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

வகை 3-ல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (பேக்கரி) பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இதர மின் வணிக சேவை நிறுவனங்கள், இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* குழந்தைகள், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படும்.

* மாவட்டத்துக்குள் பொது பஸ் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பஸ் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டாக்சிகளில், ஓட்டுனர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

* வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

திருமண நிகழ்வுகளுக்கு, வகை-2-ல் உள்ள அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் மற்றும் வகை 3-ல் குறிப்பிட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் கலெக்டரிடம் இருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

சென்னையில் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ ரயில் போக்குவரத்து 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

* திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும். படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள், கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடில் கலந்து கொள்ளவேண்டும்.

* படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்.

* திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

பதிவு: January 01, 1970
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, பேருந்து போக்குவரத்து, Chennai, Kanchipuram, Tiruvallur, Chengalpattu, Bus Transport, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
சிவசங்கர் பாபாவுக்கு நெஞ்சுவலி!- அரசு மருத்துவமனையில் அனுமதி

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அதனைத்தொடர்ந்து நேற்று மதியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை 15 நாட்கள் அதாவது ஜூலை 1ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பதிவு: January 01, 1970
சிவசங்கர் பாபா, செங்கல்பட்டு, அரசு மருத்துவமனை, Sivashankar Baba, Chengalpattu, Government Hospital, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
You May Like