Today is Saturday 2023 Apr 01
திண்டுக்கல்
கொடைக்கானலில் சிறுமி கருகிய நிலையில் சடலம்! வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!

திண்டுக்கல் பாச்சலூரில் மர்மமான முறையில் இறந்த சிறுமி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியை அடுத்த தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவரின் 9 வயது மகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி, அதன்பிறகு காணவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுமி கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில் பள்ளி வளாகத்திலேயே உடல் எறிந்த நிலையில், அந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில் சிறுமி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பள்ளி அருகே தீயில் கருகி இறந்து கிடந்த சிறுமி வழக்கில் மர்மம் நீடிக்கும் நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

பதிவு: December 23, 2021
கொடைக்கானல் சிறுமி, சிபிசிஐடி, டிஜிபி சைலேந்திரபாபு, Kodaikanal girl, CPCIT, DGP Sylendra Babu
வங்கக்கடலில் உருவானது புயல்!- தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,' வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே போல் 9 மற்றும் 10 ம் தேதிகளில் தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அத்துடன் இன்று முதல் வருகிற 10ம் தேதி வரை கேரளா மற்றும் கர்நாடகா கடலோரப் பகுதி, லட்சத்தீவு பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு: September 06, 2021
வங்கக்கடல், புயல், சென்னை வானிலை மையம், மழை, Bengal sea, storm, Chennai Weather Center, rain
`7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!'- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், புதுவையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பதிவு: August 23, 2021
கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, மழை, Cuddalore, Mayiladuthurai, Perambalur, Ariyalur, Salem, Dindigul, Madurai, rain
`10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு'- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் 16ம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல், நாளை முதல் 18ம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவும் மேகமூட்டத்துடன் காணப்படும், என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: July 14, 2021
சென்னை வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, புதுச்சேரி, காரைக்கால், Chennai Meteorological Center, Nilgiris, Coimbatore, Theni, Dindigul, Tenkasi, Pondicherry, Karaikal
கேரள பெண் கடத்தி பாலியல் வன்கொடுமை!- பழனி கோயிலுக்கு வந்தபோது கொடுமை

கேரளாவை சேர்ந்தப் பெண் ஒருவர், பழனி கோயிலுக்கு சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணை விசாரித்தபோது கடந்த மாதம் பழனி கோயிலுக்கு சென்ற போது தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறியதால், உடனடியாக கண்ணூர் போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 19ஆம் தேதி பழனிக்கு சென்றபோது, மூன்று பேர் தனது கணவரை தாக்கிவிட்டு, தன்னை கடத்திச்சென்று அருகே இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கச்சென்றபோது போலீசார், மனுவை வாங்க மறுத்து அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு: July 12, 2021
கேரளா பெண், பழனி கோயில், பாலியல் வன்கொடுமை, Kerala Woman, Palani Temple, Sexual Abuse
தமிழகத்தில் ரூ.100ஐ தாண்டியது பெட்ரோல் விலை!- எங்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் முதல் முறையாக கொடைக்கானலில் இன்று பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்தனர்.

பெட்ரோல், டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அதன் விலையில் நாள் தோறும் ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

சென்னையில் இன்றைய தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.97.43-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.91.46-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலை அதன் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவையும் சேர்த்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக வட மாநிலங்களின் சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக கொடைக்கானலில் இன்று பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 4 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை உயர்வால் லாரிகளின் வாடகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் கொடைக்கானல் மலைகளில் விளைந்த காய்கறிகளை சந்தைப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

பதிவு: June 12, 2021
கொடைக்கானல், பெட்ரோல், டீசல், Kodaikanal, Petrol, Diesel, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்