புதன்கிழமை, மே 05, 2021
திருவண்ணாமலை
`தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!'- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை (10ம் தேதி) நீலகிரி, கோவை, தேனி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடு துறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.

11ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

12, 13ம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளது.

பதிவு: January 01, 1970
தமிழ்நாடு, சென்னை வானிலை ஆய்வு மையம், மழை, Tamil Nadu, Chennai Meteorological Center, Rain
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
You May Like