புதன்கிழமை, மே 05, 2021
திருவள்ளூர்
`தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!'- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை (10ம் தேதி) நீலகிரி, கோவை, தேனி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடு துறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.

11ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

12, 13ம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளது.

பதிவு: January 01, 1970
தமிழ்நாடு, சென்னை வானிலை ஆய்வு மையம், மழை, Tamil Nadu, Chennai Meteorological Center, Rain
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஆகஸ்ட் 3 வரை மழை!- சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இதர பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பதிவு: January 01, 1970
கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மழை, சென்னை வானிலை ஆய்வு மையம், Coimbatore, Nilgiris, Chennai, Kanchipuram, Tiruvallur, Rain, Chennai Meteorological Center
“உன்னை நிர்வாணமாக படம் எடுத்துள்ளேன், பணம் கொடு!'- இளம் பெண்ணை வன்கொடுமை செய்த வக்கீல்

திருவள்ளூர் அருகே விவாகரத்து வழக்கிற்காக வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து, பணம் பறித்துவந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் விவாகரத்து பெறுவதற்காக அதேப் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் டார்ஜன் என்பவரை அணுகியுள்ளார். அப்போது ஆவணங்களை வீட்டுக்கு கொண்டுவருமாறு கூறியதையடுத்து அந்த பெண் மணவாளநகரில் உள்ள வழக்கறிஞரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் அளிக்கப்பட்டுள்ளது. அதனை பருகிய சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை நிர்வாணமாக்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த வழக்கறிஞர், அந்த பெண்ணிடம், “உன்னை நிர்வாணமாக படம் எடுத்துள்ளேன். அந்த படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றாமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும்” என மிரட்டி சுமார் 3 லட்சம் வரை பறித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அடிக்கடி பாலியல் தொந்தரவும் அளித்துள்ளார். இதற்கு வழக்கறிஞரின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். இதனை அடுத்து ஒரு கட்டத்தில் அந்த பெண், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்கறிஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பதிவு: January 01, 1970
திருவள்ளூர், மணவாளநகர், வக்கீல், இளம்பெண், பாலியல் வன்கொடுமை, Tiruvallur, Manavalanagar, Lawyer, women, Sexual Abuse
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடக்கம்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே அரசு பஸ் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று நோய்ப்பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


மேலும், இந்த ஊரடங்கு 21-ந் தேதி (இன்று) காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், கடந்த 19-ந் தேதி மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், நோய்த்தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த ஊரடங்கை 28-ந் தேதி காலை 6 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டது.

மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள், வகை 1-ல் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

மேலும், வகை 2-ல் உள்ள அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

வகை 3-ல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (பேக்கரி) பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இதர மின் வணிக சேவை நிறுவனங்கள், இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* குழந்தைகள், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படும்.

* மாவட்டத்துக்குள் பொது பஸ் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பஸ் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டாக்சிகளில், ஓட்டுனர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

* வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

திருமண நிகழ்வுகளுக்கு, வகை-2-ல் உள்ள அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் மற்றும் வகை 3-ல் குறிப்பிட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் கலெக்டரிடம் இருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

சென்னையில் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ ரயில் போக்குவரத்து 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

* திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும். படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள், கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடில் கலந்து கொள்ளவேண்டும்.

* படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்.

* திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

பதிவு: January 01, 1970
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, பேருந்து போக்குவரத்து, Chennai, Kanchipuram, Tiruvallur, Chengalpattu, Bus Transport, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
You May Like