கடந்த வாரம் சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழைவிட்டும் வெள்ளநீர் வடியாத நிலை பல இடங்களில் இருக்கிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தனித் தனியாக நேரில் சென்று பார்வையிடுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நாளை டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றாக நேரில் சென்று பார்வையிடுகிறார்கள். அதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்குகிறார்கள்.