-
தமிழ்நாடு
- சென்னை
- கடலூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- வேலூர்
- கள்ளக்குறிச்சி
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- அரியலூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டிணம்
- கோவை
- கிருஷ்ணகிரி
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- தருமபுரி
- காஞ்சிபுரம்
- சேலம்
- திருச்சி
- திருப்பூர்
- ஈரோடு
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- புதுக்கோட்டை
- நாமக்கல்
- கரூர்
- பெரம்பலூர்
- திருவாரூர்
-
திண்டுக்கல்
-
கன்னியாகுமரி
-
மதுரை
-
இராமநாதபுரம்
-
சிவகங்கை
-
தேனி
-
தூத்துக்குடி
-
விருதுநகர்
-
தென்காசி
-
திருநெல்வேலி
-
முதன்மை செய்தி
-
தேசிய செய்திகள்
-
மாநில செய்திகள்
நீலகிரி
புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது அறிவிப்பு...
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதற்காக சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள வனங்களில் வாழும் புலிகளைக்காப்பதற்காகவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், டபுள்யு டபுள்யு எப் இந்தியா நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான அமைப்புகள்,பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த அமைப்பினர் நடத்திய ஆய்வில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், கடந்த 2010-ம் ஆண்டு இருந்த புலிகளின் எண்ணிக்கை, தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சத்தி புலிகள் காப்பகத்திற்கு டிஎக்ஸ் 2(TX2) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டபுள்யு டபுள்யு எப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி உயிர்க்கோள நிலப்பரப்பைச் சேர்ந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் புலிகள் வாழ்கின்றன. கடந்த 2013-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட சத்யமங்கலத்தில் தற்போது 80 புலிகள் உள்ளன. முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் மற்றும் பி.ஆர்ஹில்ஸ் புலிகள் காப்பகங்களுடன் இந்த காப்பகம் இணைந்துள்ளது. இதனால் புலிகளால் எளிதாக இரை தேடவும் புதிய எல்லைக்குள் பிரவேசிக்கவும் முடிகிறது.
இதேபோல், புலிகளின் எண்ணிக்கையை இருமடங்கு அதிகரித்ததற்காக நேபாளத்தில் உள்ள பார்டியா தேசியப் பூங்காவும், இந்த ஆண்டுக்கான டிஎக்ஸ் 2 விருதினைப் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்திற்கும் இடையே புலிகள் தடையின்றி, எல்லைகளைத் தாண்டிச் சென்று வர இந்த பூங்கா வழிவகுக்கிறது.
உலக அளவில் 2010-ம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை 3200 ஆக சரிந்திருந்த நிலையில், 2016-ல் நடத்தப்பட்ட ஆய்வில் புலிகள் எண்ணிக்கை 3900-மாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`ராணுவத்தில் சேர இளைஞர்களை உற்சாகப்படுத்திவிட்டீர்கள்!'- முதல்வருக்கு ராணுவம் நெகிழ்ச்சி கடிதம்
நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவ அதிகாரி அருண் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை தக் ஷின் பாரத் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டிணட் ஜெனரல் அருண், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டா் விபத்தில் இந்திய ராணுவத்தினா் 13 போ் உயிரிழந்த துயரமான நேரத்தில், அவா்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் அருகில் இருந்து ஆறுதல் அளித்தமைக்கு எனது மனமாா்ந்த நன்றியையும், இதயப்பூா்வமான பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தகவல் அறிந்த உடனே- நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் தாங்கள் விரைந்து வந்து, இறந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவா்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரா்கள், ராணுவ உயா் அலுவலா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீா்கள்.
அந்தத் தருணத்தில் எந்தெந்த உதவி முடியுமோ அந்த உதவிகளை எல்லாம் தங்களின் தலைமையின் கீழ் உள்ள தமிழக அரசின் மொத்த நிா்வாகமும் செய்து தந்தது. இதுபோன்ற ஆதரவுகள்தான் எதிா்காலத்தில் நம் இளைஞா்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேருவதற்கும், ராணுவ உடை அணிவதற்கும், உற்சாகமூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும்.
தக் ஷின் பாரத் பகுதியின் தலைமை அலுவலா் என்ற வகையில் தங்களுடைய முன்மாதிரியான ஆதரவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். உங்களுடைய இந்த செயல், பணியில் இருக்கும் ராணுவ வீரா்களுக்கும், மூத்த ராணுவ வீரா்களுக்கும் தமிழக அரசு நமக்கு ஆதரவாக இருக்கின்றது என்ற உணா்வை ஏற்படுத்தி, ஊக்கத்தை அளிப்பதோடு தேவைப்படும் காலங்களில் அவா்களுக்கு இந்த அரசு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு தங்களுக்கும் அனைத்து அரசு அலுவலா்களுக்கும் -நம் மாநிலத்துக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

8 நாட்களுக்கு பிறகு கேமராவில் சிக்கியது T23 புலி!- தேடுதல் வேட்டையில் வனத்துறை
8 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் T23 புலியின் நடமாட்டம் பதிவாகி இருக்கிறது. இதன் அடிப்படையில் வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஐம்பதுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், 20-க்கும் மேற்பட்ட அதிரடி படையினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் உட்பட பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, புதர்களில் பதுங்கியிருக்கும் விலங்குகளின் வெப்பநிலை மூலம் அவற்றை கண்டறியும் நவீன கேமரா பயன்படுத்தப் படுகிறது. இதன் அடிப்படையிலும் புலியை தேடும் பணிகள் தொடர்ந்து வருகிறது.
T23 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆண் புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். கடந்த 17 நாட்களாக புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், 18வது நாளாக புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே 8 நாட்களுக்குப் பிறகு ஓம்பெட்டாவில் வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் அதிகாலை 3 மணிக்கு புலியின் நடமாட்டம் பதிவாகி இருக்கிறது. அதன் அடிப்படையில் புலியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவானது புயல்!- தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,' வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே போல் 9 மற்றும் 10 ம் தேதிகளில் தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அத்துடன் இன்று முதல் வருகிற 10ம் தேதி வரை கேரளா மற்றும் கர்நாடகா கடலோரப் பகுதி, லட்சத்தீவு பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க களமிறங்கியது தனிப்படை!- சிக்கப் போவது யார்?
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கோடநாடு பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அங்கிருக்கக்கூடிய பங்களாவில் 11 பேர் கொண்ட குழு உள்ளே நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதுடன் அன்று இரவு காவலாளி ஓம்பகதூர் என்பவரையும் கொலை செய்தனர். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாகவே உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கில் பல்வேறு மர்மங்களும், சந்தேகங்களும் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயான் இந்த வழக்கு விசாரணையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சஜீவன், அவரது சகோதரர் சுஷில் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணையில் கூடுதல் தகவல் கிடைத்திருப்பதாக கூறி கடந்த மாதம் 13ம் தேதி கோத்தகிரி காவல்துறையில் மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதன் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட நிர்வாகம், கூடுதல் விசாரணையை மேற்கொள்ளலாம். எந்தவித தடையும் இல்லை என்று உத்தரவிட்டது. தொடர்ந்து முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் கடந்த மாதம் 16ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
அதேபோல முன்னாள் கார் ஓட்டுர் கனகராஜின் சகோதரர் தனிப்பாலிடமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பிட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட கனகராஜ், சயான், வாழையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதால் வாழையாறு மனோஜ் , சயான் ஆகியோர் மேட்டுப்பாளையம் வழியாக கோவை சென்ற நிலையில் மற்ற 8 பேர் கூடலூர் வழியாக சென்றனர். கூடலூர் பகுதியில் தடுத்து நிறுத்தி காவலில் இருந்த அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தனிப்படை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படும் நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

`நீலகிரி, கோவை, திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு!'- சென்னை வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை நீலகிரி, திண்டுக்கல், தேனி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வருகின்ற 3ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல் வருகின்ற 4ம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யலாம். 5ம் தேதி நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாக இருக்கும். இன்று முதல் வருகின்ற ஐந்தாம் தேதி வரை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி, கேரள கடலோர பகுதி, லட்சத் தீவு பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்
