புதன்கிழமை, மே 05, 2021
மதுரை
`7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!'- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், புதுவையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பதிவு: January 01, 1970
கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, மழை, Cuddalore, Mayiladuthurai, Perambalur, Ariyalur, Salem, Dindigul, Madurai, rain
`கேம் விளையாடாதே!'- தந்தை கண்டித்ததால் உயிரை மாய்ந்த 5ம் வகுப்பு மாணவன்

மதுரையில் மொபைல் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை தந்தை திட்டியதால் அச்சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ் காலனியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மகன் ஜெயபிரசாத் (10). இவர் ஆணையூர் தனியார் பள்ளிக் கூடத்தில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜெயபிரசாத்துக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தன. ஆனால் அந்த சிறுவன் படிப்பில் கவனம் செலுத்தாமல், செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த போக்கை தந்தை கண்டித்து உள்ளார்.

அதில் விரக்தி அடைந்த ஜெயபிரசாத் நேற்றிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: January 01, 1970
செல்போன் கேம், தந்தை, மாணவன் தற்கொலை, மதுரை, Cellphone game, father, student suicide, Madurai
`தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு!'- உயர்நீதிமன்றம் அதிரடி

2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஜனவரி 2020-ல் குரூப் 1 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மீண்டும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆங்கிலவழியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை முறைகேடாக பெற்று வேலைக்கு சேர்கின்றனர். அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவையே பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பதிவு: January 01, 1970
TNGovt, Madurai highcourt, தமிழ்நாடு அரசு, மதுரை உயர்நீதிமன்றம்
5 மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

சென்னை புழல், மதுரை, சேலம், கடலூரில் உள்ள மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை புழல் சிறை கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் சிறை கண்காணிப்பாளராக இருக்கும் நிகிலா நாகேந்திரன் சென்னை புழல் சிறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார் கடலூர் சிறை கண்காணிப்பாளராகவும், மதுரை சிறை கண்காணிப்பாளராக இருந்த ஊர்மிளா திருச்சி சிறை கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு: January 01, 1970
சிறை கண்காணிப்பாளர்கள். புழல், மதுரை, சேலம், கடலூர், தமிழக அரசு, Prison Superintendents. Puhal, Madurai, Salem, Cuddalore, Government of Tamil Nadu
ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் நேற்று திறக்கப்பட்ட மதுக்கடைகளில் ஒரே நாளில் 164 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 49 கோடியே 54 லட்சம் விற்பனையாகியுள்ளது.

ஊரடங்கு தளர்வின் ஒருபகுதியாக 27 மாவட்டங்களில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி, சென்னை தி.நகரில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக போடப்பட்டிருந்த வட்டத்தில் வரிசையில் நின்ற மதுபிரியர்கள், மதுபானங்களை வாங்கினர். முகக்கவசம் அணிந்த வாடிக்கையாளர்களின் கைகளில், கிருமிநாசினி தெளித்த பின்பே மதுபானங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

மதுரையில் மதுபானங்களுக்கு சூடம் ஏற்றி வழிபட்டனர். மதுபாட்டிலுக்கு முத்தமிட்ட குடிமகன்கள், தலையில் பாட்டிலை வைத்து கொண்டாடினர். காஞ்சிபுரத்தில் காலை 10 மணிக்கு மதுக்கடை திறக்கும் முன்பே குவிந்த வாடிக்கையாளர்கள், மதுபானங்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 113 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கடைகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. காலை 10 மணிக்கு கடை திறக்கப்பட்ட போது ஒரு சில இடங்களில் கூட்டம் காணப்பட்டது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 49.54 கோடிக்கும், சென்னையில் 42.96 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் 33.65கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவை மண்டலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப் படவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

பதிவு: January 01, 1970
சென்னை, மதுரை, டாஸ்மாக், மது விற்பனை, தமிழ்நாடு, Chennai, Madurai, Tasmac, Liquor Sales, Tamil Nadu, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
You May Like