புதன்கிழமை, மே 05, 2021
மாநில செய்திகள்
குறைந்து வருகிறது விலை!- தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் மக்களே!

தங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் பலர் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,369 ஆக இருந்தது. நேற்றைய முன்தினம் இதன் விலை 4,371 ரூபாயாக இருந்தது. அதேபோல, 34,968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 16 ரூபாய் குறைந்து 34,968 ரூபாய்க்கு வந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.34,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,355க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து ரூ.63.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பதிவு: January 01, 1970
தங்கம், வெள்ளி, சென்னை, பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், Gold, Silver, Chennai, Public, Customers
`ஜனாதிபதியை ஒரே ஒருநாள் பிரதமராக்க முடியுமா?'- மோடிக்கு திருமாவளவன் சவால்

"குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஒரே ஒருநாள் பிரதமராக்க முடியுமா?" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி சவால் விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கோட்டக்கவுண்டம்பட்டியில் பெரியார் பிறந்தநாளை ஒட்டி சமூக நீதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி , "தலைமுறை, தலைமுறையாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்கும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் நியாயமாக கிடைக்கும் நீதியே சமூக நீதி. ஒடுக்குமுறை என்பது பொது உளவியலாக மாற்றப்பட்டதால் உழைப்பு சுரண்டலும், மூளை சுரண்டலும் நடைபெறுகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஒரே ஒருநாள் பிரதமராக்க முடியுமா? என மோடிக்கு சவால் விடுக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த அரசியல் பிள்ளை தான் பாரதிய ஜனதா கட்சி.  மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. நாடு முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, விசிக என அனைத்தும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக செயல்பட்டால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற முடியும்" என்று கூறினார்.

பதிவு: January 01, 1970
ராம்நாத் கோவிந்த், மோடி, திருமாவளவன், பாஜக, விசிக, Ramnath Govind, Modi, Thirumavalavan, BJP, VCK
`டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!'- வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை டெல்டா மாவட்டங்கள் , புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 19ம் தேதி டெல்டா மாவட்டங்கள் அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். வரும் 20ம் தேதி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதேபோல் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்' என்று கூறப்பட்டுள்ளது.

பதிவு: January 01, 1970
டெல்டா மாவட்டம், கனமழை, சென்னை வானிலை ஆய்வு மையம், Delta District, Heavy Rain, Chennai Meteorological Center
`ஜெயலலிதா மரணம் குறித்து 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்கணும்!'- உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்னும் 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அப்போதைய அதிமுக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையம் பல்வேறு கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளது. இந்த நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு ஆணையத்தின் செயல்பாடுகளை நீட்டித்தது திமுக அரசு.

இதனிடையே, ஜெயலலிதா மரண வழக்கில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் இருந்து விலக்குக்கோரிய அப்போலோவின் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்கவேண்டியுள்ளது என்று அளித்த தகவலின்பேரில் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டவர்களிடம் ஆணையம் இதுவரை விசாரணை நடத்தவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

பதிவு: January 01, 1970
ஜெயலலிதா மரணம், உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையம், Jayalalithaa death, Supreme Court, Arumugasami Commission
`தலைமையும் சரியில்லை; கூட்டணி தர்மத்தையும் காப்பாற்றவில்லை!'- அதிமுக மீது ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு

"சரியான தலைமை இல்லாததால், அதிமுக தொண்டர்கள் நமக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை" என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக, 7 இடங்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. கூட்டணியின்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி அதிமுகவின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினரானார் அன்புமணி ராமதாஸ். அதன்பிறகு வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாமக கூட்டணி தொடர்ந்தது. சட்டமன்றத் தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்ட பாமக 5ல் வெற்றிபெற்றது.

வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் பாமகவின் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனித்துப் போட்டி என்ற அதிரடியாக அறிவித்துள்ளது பாமக.

இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் காணொலி வாயிலாக கலந்துரையாடியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அப்போது, சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை என்று குறிப்பிட்ட ராமதாஸ், பாமகவால் கூட்டணிக் கட்சிகள் பலன் அடைந்ததாகவும், அவர்களால் பாமகவுக்கு எந்த பலனும் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

சரியான தலைமை இல்லாததால், அதிமுக தொண்டர்கள் நமக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று பாமகவின் வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். ” புதியதொரு விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம் ” என்ற முழக்கத்துடன் தனது உரையை முடித்தார்.

பதிவு: January 01, 1970
அதிமுக, பாமக, ராமதாஸ், admk, pmk, ramadoss
`நீட்'டால் மாணவர்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியவர் ஈபிஎஸ்!'- முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

நீட் தேர்வால் மாணவச் செல்வங்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியதுதான் அதிமுக தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘நீட்’ தேர்வு பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய வினாவிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், "நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தி, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்த்தவர் கலைஞர். ஏன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாகூட நீட் தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய இவர் (ஈபிஎஸ்), முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது. ‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவரான இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான்.

நீட் தேர்வு அச்சத்தில், அனிதா உள்பட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான். குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்ததும் அ.தி.மு.க. ஆட்சிதான். அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான். இப்போது உயிரிழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள், அதாவது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான். ஒன்றிய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள். இப்போதும் இருக்கிறீர்கள். சி.ஏ.ஏ. மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, பா.ஜ.க. கூறியபோது, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க. நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்தத் தெம்பு, திராணி அ.தி.மு.க.-விற்கு இல்லை.

அதைச் செய்திருந்தால், நீட் தேர்வுக்கு ஓரளவிற்கு விலக்கு கிடைத்திருக்கும். ஆனால் நீட் தேர்வால் மாணவச் செல்வங்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியதுதான் அ.தி.மு.க. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சட்ட மசோதாவை இன்று நான் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்து, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர்களை சேர்க்க இந்த அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன குற்றச்சாட்டிற்கு பதிலாக சொல்லி அமைகிறேன்" என்றார்.

பதிவு: January 01, 1970
நீட் தேர்வு, மாணவர்கள், ஈபிஎஸ், ஸ்டாலின், தமிழக அரசு, Neet Exam, Students, EPS, Stalin, TamilNadu Government
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
You May Like