புதன்கிழமை, மே 05, 2021
மாவட்ட செய்திகள்
வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு பூட்டு- விவசாயிகள் கைது

உயர் மின் கோபுரத்திற்கு முறையாக பணம் தரவில்லை என கூறி வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு பூட்டு போட வந்த விவசாயிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெப்பலம்பட்டி ஊராட்சியில் 800 கே.வி.ஏ உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியின் போது முறைப்படி கணக்கெடுப்பு நடத்தாமல் வெட்டப்பட்ட மரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வி.ஏ.ஓ அலுவலகம் முதல் முதல்வர் அலுவலகம் வரை புகார் கொடுத்தும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெப்பலம்பட்டி முழுவதும் வி.ஏ.ஓ அலுவகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதையெட்டி நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட பூசாரிகள் பாதுகாப்பு பேரவை மாநில அமைப்பு செயலாளர் கே.மணி தலைமையில் மாதேஸ்வரன், பழனி, ராஜா, மற்றும் அருணாசலம் ஆகிய 5 பேர் வெப்பாலம்பட்டியில் உள்ள வி.ஏ.ஓ அலுவலத்திற்கு பூட்டு போட வந்தனர். அவர்களை போச்சம்பள்ளி போலீசார் தடுத்தி நிறுத்தி சமாதானம் பேசினார்கள்.

சமாதானத்தை விவசாயிகள் ஏறக்காமல் மீண்டும் வி.ஏ.ஓ அலுவலகத்தை பூட்டு போட முயற்சிக்கும் போது போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: January 01, 1970
விஏஓ அலுவலகம், விவசாயிகள், கிருஷ்ணகிரி, VAO Office, Farmers, Krishnagiri
கூட்டு சேர்ந்து சரக்கு அடித்தனர்; கொலையில் முடிந்த தகராறு!- ஓசூர் அதிர்ச்சி

ஓசூர் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அச்செட்டிப்பள்ளியை சேர்ந்த பிரேம்நாத், மகேந்திரன், பாபு ஆகியோர் நேற்றிரவு மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பாபுவை மற்ற இருவரும் பீர்பாட்டில், கல்லால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பாபு உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த மத்திகிரி போலீசார் பாபுவின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவத்துக்கு காரணமான ஒருவரை கைது செய்துள்ள மத்திகிரி போலீசார் தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

பதிவு: January 01, 1970
மதுபானம், கொலை, ஓசூர், Alcohol, murder, Hosur
தடுத்த ஊராட்சி தலைவர்... கொந்தளித்த அகரம் பெண்கள்... மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட ஊராட்சி செயலாளர்!

அகரம் ஊராட்சி மன்ற செயலாளரை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஊராட்சி மன்ற செயலாளர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் ஊராட்சி மன்ற செயலாளராக மெய்யப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஊராட்சி செயலாளர் மெய்யப்பன் விடுப்பில் இருந்தார். இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணியில் சேர பி.டி.ஓ-விடம் பணி ஆணை வாங்கி வந்துள்ளார்.

ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி ராமமூர்த்தி, ஊராட்சி செயலாளர் மெய்யப்பனை பணியில் சேரவிடாமல் தடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், ஊராட்சி செயலாளரை மாற்றும் எண்ணத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் இருப்பதாக கூறி அப்பகுதி பெண்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் நேற்று மாலை அகரம் காளியம்மன் கோயிலின் முன்பு 100 க்கும் மேற்பட்டோர், ஊராட்சி செயலாளரை மாற்றக் கூடாது என கோஷமிட்டனர்.

தகவல் அறிந்த காவேரிப்பட்டினம் பி.டி.ஓ அசோக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊராட்சி செயலாளர் மெய்யப்பனை மீண்டும் பணியில் நியமிப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர்.

பதிவு: January 01, 1970
அகரம், ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர், பெண்கள், Agaram, Panchayat Leader, Panchayat Secretary, Women
நள்ளிரவில் வெடி மருந்துடன் வெடித்து சிதறிய கார்!- சாத்தான்குளம் அருகே அதிர்ச்சி

சாத்தான்குளம் அருகே வெடி தயாரிக்கும் மருந்துகள் இருந்த கார் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் தனது காரில் பயங்கர வெடி பொருட்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் இரவு நேரத்தில் அவரது காரிலிருந்து அலாரம் அடித்துள்ளது. இதனால் பாலகிருஷ்ணன் தனது காரில் உள்ள ரிமோட் மூலம் காரை லாக் செய்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது காரில் இருந்து வெடி சத்தம் கேட்டுள்ளது. மீண்டும் சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து சிதறியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது காரின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாக ஊர் முழுவதும் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது.

பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்தை சட்டவிரோதமாக காரில் ஏற்றி வந்தது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் உயிர்சேதம் அனைத்தும் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: January 01, 1970
சாத்தான்குளம், வெடி மருந்து, கார் விபத்து, Sattankulam, explosives, car accident
`நீலகிரி, கோவை, திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு!'- சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை நீலகிரி, திண்டுக்கல், தேனி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வருகின்ற 3ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல் வருகின்ற 4ம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யலாம். 5ம் தேதி நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாக இருக்கும். இன்று முதல் வருகின்ற ஐந்தாம் தேதி வரை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி, கேரள கடலோர பகுதி, லட்சத் தீவு பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு: January 01, 1970
நீலகிரி, கோவை, திருப்பூர், மழை, சென்னை வானிலை மையம், Nilgiris, Coimbatore, Tiruppur, Rain, Chennai Meteorological Center
மைசூர் மலையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!- சிக்கிய தமிழக தொழிலாளர்கள்

மைசூரு சாமுண்டி மலைப்பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ பட்டம் படித்து வந்த 22 வயது இளம் பெண், தனது நண்பருடன் சாமுண்டேஸ்வரி மலைப்பகுதிக்கு சென்றார். இயற்கை காட்சிகளை சுற்றிப்பார்த்த இருவரும் மாலையில் பைக்கில் வீட்டிற்கு திரும்புவதற்காக மலைப்பகுதியில் இறங்கி வந்து கொண்டிருந்தனர். தப்பிலினள்ளி பகுதியில் வந்தபோது குடிபோதையில் அந்த வழியாக எதிரே வந்த 6 பேர் கும்பல், அவர்களை வழிமறித்து தாக்கியது. வாலிபரை அந்த கும்பல் கல்லால் தாக்கியதில் மயங்கி விழுந்தார்.

பின்னர், அந்த கும்பல் மாணவியை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தது. இதில், அப்பெண் மயக்கம் அடைந்தார். நள்ளிரவு அந்த வழியாக சென்றவர்கள் வாலிபர் மயங்கி கிடந்ததை பார்த்து மீட்டனர். பின்னர்தான், கூட்டு பலாத்காரம் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனே, இது குறித்து ஆவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் செல்வதற்குள், அப்பகுதியில் இருந்தவர்கள் இளம் பெண் மற்றும் வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா எல்லையில் கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த குற்றவாளிகள் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இவர்கள் 5 பேரும் தமிழகத்தின் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் அதில் ஒருவர் 17 வயது சிறுவன் என்பதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

கைதான 5 பேரும் கூலித் தொழிலாளர்கள் என்றும் இவர்கள் அடிக்கடி வேலைக்காக மைசூர் சென்று வருவார்கள் என்றும் தெரியவந்துள்ளது. கைதான் 5 பேரில் 4 பேர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேயூரை சேர்ந்தவர்கள். ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரத்தை சேர்ந்த பூபதியையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகள் 6 பேரும் கார்பெண்டர், எலெக்ட்ரீஷியன், ஓட்டுநராக வேலை செய்து வருகின்றனர்.குற்றவாளிகள் 6 பேரில் தலைமறைவான எஞ்சிய ஒருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பதிவு: January 01, 1970
மைசூர், மாணவி பாலியல் வன்கொடுமை, தமிழக தொழிலாளர்கள், கர்நாடக போலீஸ், Mysore, Student Sexual Abuse, Tamil Nadu Workers, Karnataka Police
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
You May Like