Today is Saturday 2023 Apr 01
விருதுநகர்
சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து!- பறிபோன 3 தொழிலாளர்களின் உயிர்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவகாசி அருகே களத்தூரில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் வழிவிடும் முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்த சோகத்தில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மஞ்சள் ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி, செந்தில் குமார், காசி ஆகியோர் பலியாகினர்.

மேலும் இந்த வெடி விபத்தில் காயமடைந்த 4 தொழிலாளர்களும் சாத்தூர், கோவில்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 அறைகள் சேதம் அடைந்துள்ளது. இதனிடையே பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்த 1க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ அணைக்கும் பணியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதிவு: January 05, 2022
சாத்தூர் பட்டாசு ஆலை, வெடி விபத்து, தொழிலாளர்கள் பலி, Sattur firecracker factory blast, workers kills
அருப்புக்கோட்டையில் தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

அருப்புக்கோட்டையில் தடுப்பூசி முகாமுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் ஏழாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் 1 லட்சம் நபர்களை இலக்காக கொண்டு 1162 தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற ஆறு மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் மொத்தம் 15,50,893 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையிலும், தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டு, மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்திட மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, 12.9.2021, 19.9.2021, 26.9.2021, 3.10.2021, 10.10.2021, 23.10.2021 ஆகிய தேதிகளில் இதுவரை ஆறு மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை 5 கோடியே 73 லட்சத்து 91 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று ஏழாவது முறையாக மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு முகாம் முதல் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், இரண்டாம் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் முக்கியத்துவம் அளித்து நடைபெறுகிறது.

தமிழ்நாடு முதல்வர் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ். தங்கபாண்டியன், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

பதிவு: October 30, 2021
தடுப்பூசி முகாம், முதல்வர் ஸ்டாலின், Vaccination Camp, Chief Minister Stalin
நகைச்சுவையே இன்று சரிந்து விட்டது

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்., உதயகுமார், செல்லூர் ராஜு, பாஜக எம்.எல்.ஏ.க்களே தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டுகின்றனர். ஆனால் முன்னாள் முதல்வர் பழனிசாமி விமர்சிக்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கைகள், சாதாரண படுக்கைகள் காலியாக உள்ளன என குறிப்பிட்டார்.

தடுப்பூசி செலுத்துவதில் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட மா.சுப்பிரமணியன், தடுப்பூசியை தமிழகத்தில் போட்டுக்கொள்ளாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று கூறியிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மே 6ம் தேதி எடப்பாடி பழனிசாமி காபந்து முதல்வராக இருக்கும் போது தமிழகத்தின் ஒருநாள் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெட்ரிக் டன் தான் இருந்துது என்றும் தற்போது ஒருநாள் கையிருப்பு 650 மெட்ரிக் டன் இருக்கிறது என்றும் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்., உதயகுமார், செல்லூர் ராஜு, பாஜக எம்.எல்.ஏ.க்களே தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டுகின்றனர் என்றார்.

பதிவு: June 02, 2021
jhkjhk,oiuoiuo
தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்