புதன்கிழமை, மே 05, 2021
india, coronavirus, இந்தியா, கொரோனா
பதிவு: 2021-09-01 11:37:36

கடந்த 24 மணி நேரத்தில் 460 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,39,020 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசு தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 41,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,28,10,845 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 33,964 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 3,19,93,644 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 460 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,39,020 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,33,18,718 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 65,41,13,508 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கேரளாவில் 30,203 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 115 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல இதுவரை 64.51 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.