புதன்கிழமை, மே 05, 2021
உயர்நீதிமன்றம், நீதிபதி புகழேந்தி, ஜாமீன், High Court, Judge pugazhendhi, Bail
பதிவு: 2021-09-14 15:17:46

உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதின் பேரில் "இனி மது குடிக்க மாட்டோம்" என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்த குடிமன்னர்கள் இரண்டு பேருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார்.

திருச்சியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர், நண்பர்களுடன் ஒன்றாக மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவர் மது பாட்டிலால் தாக்கப்பட்ட வழக்கில் இவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘அதிகளவிலான இளைஞர்கள் மது அருந்துவதால் தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த இரு இளைஞர்களுக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த வழக்கே வந்திருக்காது. எனவே, மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்கப்படும்’’ என்றார். இதை ஏற்பதாக மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து மனு மீதான விசாரணையை இன்று தொடர்ந்தது. அப்போது, இனி மது குடிக்க மாட்டோம் என்று சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, பிரமாணப் பத்திரம் போதாது என்றும் ஊர் முக்கியஸ்தர்கள் யாராவது உறுதி மொழி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். உறுதி மொழி வழங்கினால் ஜாமீன் பற்றி பரிசீலிக்கலாம் என்று கூறிய நீதிபதி, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.