புதன்கிழமை, மே 05, 2021
டோக்யோ ஒலிம்பிக், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, மகளிர் ஹாக்கி அணி, Tokyo2020, TeamIndia, Hockey
பதிவு: 2021-07-31 11:45:44

டோக்யோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தன்னுடைய கடைசி மற்றும் 5வது லீக் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இந்தியாவின் வேதாந்தா கடாரியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். பின்பு இந்தியாவின் நேஹா ஒரு கோலும் அடித்தார். தென் ஆப்பிரிக்கா வீராங்கனைகள் மொத்தம் 3 கோல் அடித்தனர்.

இதனையடுத்து இந்திய மகளிர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வென்றது. ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா பெறும் 2வது வெற்றியாகும் இது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.