Today is Thursday 2022 Jan 27
BREAKING NEWS:
ஜி கே வாசன்,ஒமிக்ரான் தொற்று பரவல் ,மதுக்கடை மூட வேண்டும்
பதிவு: 2022-01-11 11:59:11

கரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது:-

தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை அன்றும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை டாஸ்மாக்கில் மதுவிற்பனை களைகட்டியது.
கடந்த 9 ஆம் தேதி மட்டும் தமிழகத்தில் 217.96 கோடி ரூபாய் மது விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னை மண்டலத்தில் 50.04 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது. திருச்சி மண்டலம்- 42.59 கோடி ரூபாய், சேலம் மண்டலம்- 40.85 கோடி ரூபாய், கோவை- 41.28 கோடி ரூபாய் என மது விற்பனை நடந்துள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்தும் கோட்பாடுகள் 100 சதவிகிதம் வெற்றியடைய வேண்டும் என்றால் மதுக்கடைகளை மூட வேண்டும். தொடர் விடுமுறை காரணமாக அதிகப்படியானோர் மதுக்கடைகளில் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...