Today is Saturday 2023 Apr 01
இந்தியா, ஒமிக்ரான் வைரஸ், தமிழ்நாடு, India, Omicron Virus, Tamil Nadu
பதிவு: 2021-12-20 11:05:31

இந்தியா முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. 11 மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமிக்ரான் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என பரவியது.


இந்நிலையில், இந்தியா முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. 11 மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. மகாராஷ்டிராவில் 54, டெல்லி 22, தெலுங்கானா 20, ராஜஸ்தான் 17, கர்நாடகா 14, குஜராத் மற்றும் கேரளா 11, ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒன்று என மொத்தம் 153 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்