Today is Sunday 2021 Dec 05
சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், Chennai, Kanchipuram, Chengalpattu, Tiruvallur
பதிவு: 2021-11-25 10:14:37

``18 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை தொடரும்'' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் , இன்று தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தென் தமிழகம் மற்றும் கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை, செங்கல்பட்டு, டெல்டா மற்றும் தென்மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

26-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

27-ம் தேதி கடலூர், விழுப்புரம்,காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

28-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் மற்றும்புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடியமிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...