புதன்கிழமை, மே 05, 2021
புதுச்சேரி,  ரங்கசாமி, விஜய்சேதுபதி, Puducherry, Rangasamy, Vijay Sethupathi
பதிவு: 2021-08-20 12:50:06

புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் 'காத்துவாக்குல 2 காதல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை, விஜய்சேதுபதி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்து வந்த நிலையில், தற்போது 28ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

இதனால் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால், கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜய்சேதுபதி கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக முதல்வர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.