Today is Sunday 2021 Dec 05
கொரோனா, இந்தியா, கொரோனா மரணம், Corona, India, Corona death
பதிவு: 2021-10-28 11:12:50

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 733 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து நாட்களாக தொற்று ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் 16,156 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 13,451 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய பாதிப்பு அதிகரித்துள்ளது.

தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 17,095 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 3,36,14,434 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் விகிதம் 98.20 % ஆக உள்ளது. இப்போது 1,60,989, பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 733 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 104.04 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...